Close
Location
Address
50A, Point Pedro Road, 1st Lane, Jaffna.
Phone
Phone
(+94) 77 791 7579
+(94) 21 221 7579
Email
Email
info@swisso.net

வாஸ்துவின் நன்மைகள்

வாஸ்துவின் நன்மை இது ஒரு இயற்கை நியதிகளுக்கு மட்டுமே உட்பட்டது. இது முழுக்கமுழுக்க விஞ்ஞான பூர்வமானதாகும். நமது மனை, நிறுவனம், தொழிற்சாலை மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றை வாஸ்து முறைக்கேற்ப அமைப்பதன் மூலம் நமக்கு நல்ல எதிர்காலத்தை நாமே அமைத்துக் கொள்ளமுடிகின்றது

vasthu-img இப்பூமியில் பஞ்ச பூத சக்திகளாக நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவற்றின் கூட்டுச் செயல்களின் தாக்கம் பெற்றது. ஒவ்வொரு மனையிலும் திசைகளில் இப்பஞ்ச பூதங்களின் செயல்களும், தாக்கமும் இருப்பதால் அவற்றின் அமைப்பிற்கேற்றவாறு நம் செயல்தன்மை அமையும்போது நாம் நல்ல பலன்களைபெற அவை பெரிதும் உதவுகின்றன. மாறுபடும்போது. அவை நமக்கு துன்பங்களை தருகின்றன என்பது யதார்த்தமான உண்மையாகும். நாம் குடியிருக்கும் மனையும் நாம் பணிபுரியும் கட்டிடமும் வாஸ்து பலத்துடன் மிகச் சிறியதாக இருந்தாலும்கூட நமக்கு எல்லா நலன்களையும் சந்தோசத்தையும் தரவல்லன. எனவே நாட்டின் ஒவ்வொருவரும் வாஸ்து முறையுடன் மனைகளை, வீடுகளை, கட்டிடங்களை அமைத்து கொள்வதாலும். அதன் முறைகளை பின்பற்றுவதன் மூலம் நமது சமுதாயமே முழு தீமையிலிருந்து விடுபட்டு சுபீட்சமான வாழ்வினைப் பெற்று நன்மையடையலாம்.

இப்பூமியில் பிரபஞ்சத்தில் வேறுபட்ட வலிமையுள்ள மண்டல சக்தி வயல்கள் (ஒரு செயற்கை கோல் போல்) இயங்குகின்றன. இந்நிலப்பரப்பில் எந்தத்தடையுமின்றி மிகதுல்லியமாக அவை செயல்படுகின்றன அதில் நாம் ஒரு மதில் சுவரோ, வீடோ, கட்டிடமோ கட்டும்போது அவற்றின் பாதையில் நாம் குறுக்கிடுகின்றோம். அவற்றின் மூலம் நல்ல பலன்களைபெற அவற்றின் தன்மையறிந்த வாஸ்துநிபுனரின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கேற்ப அவற்றைப் பயன்படுத்தி வெற்றிபெற வேண்டும் என்கிறது விஞ்ஞான வாஸ்து. இந்த விதிகளுக்குட்பட்ட கட்டுமாணப் பணி, ஆக்க சக்திகளைப் பெருக்கி, நமக்கு நல்ல பலன்களைத் தருகிறது.வாஸ்து விதிகளுக்கு முரண்பட்ட கட்டுமாணப்பணி அழிவு சக்திகளைப் பெருக்கி நமக்கு தீமைகளை தந்து இடையூறு விளைவிக்கின்றது. என்பதை உணர்ந்து வாஸ்து விதிகளுக்கு எதிராக நமது இல்லத்தையோ, கட்டிடத்தையோ அமைக்கும் போது நாம் பொருளாதார சீர்கேடு, உடல் நலக்குறைவு, தீராத வியாதிகள். விபத்துக்கள், துயரங்கள், கடன், நிம்மதிக்குறைவு போன்ற பல்வேறு தீய பலன்களை அனுபவிக்க வேண்டியுள்ளதோடு - நிலத்திற்கும் கேடு விளைவிக்கின்றோம். அதன்படி வடகிழக்கில் (ஈசான்யத்தில் நீரின் தாக்கமிருப்பதால் அத்திசையில் பள்ளங்கள், கிணறு, குழாய் கிணறு, ஆகியன அமைத்தல் நற்பலன்கள் தரும். தென் கிழக்கில் (அக்கினியில் நெருப்பின் தாக்கமிருப்பதால் அத்திசையில் சமையலறை. அடுப்பு, கொதிகலன்கள், மின்சக்தி உற்பத்தி இயந்திரங்கள் (ஜெனரேட்டர்கள்) ஆகிய அமைப்புக்கள் இருத்தல் நல்ல பலன்களை தரும். தென் மேற்கில் (நிருதியில்) நிலத்தின் தாக்கமிருப்பதால், அத்திசை மேடாகவும், பாரமானதாகவும், உயரமான கட்டிடங்கள், மேல்நிலைத் தொட்டி (தண்ணீர் டேங்) உரிமையாளர் பணியாற்றும் அறை மற்றும் படுக்கையறை, அமைப்புக்கள் இருத்தல் நற்பலன்கள் தரும். வடமேற்கில் (வாயுவில் காற்றின் தாக்கமிருப்பதால், அத்திசையில் விருந்தினர் தங்குமிடமும், விற்பனைக்குரிய பொருள்கள் வைக்குமிடமும் கழிவறை அமைத்தால் நற்பலன்கள் தரும். மையப் பகுதியில் ஆகாயத்தின் தாக்கமிருப்பதால், அப்பகுதியில் கூடம் அல்லது செயல்பாடுகள் குறைந்த காலியிடம் அமைத்தல் நற்பலன்கள் தரும்.

vasthu-img பூமியில் பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளில் குறுக்கீடுகள் வரும்போது, சக்தி மண்டல வயல்கள் தாக்கத்திற்குள்ளாகி புயல், வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம், பூகம்பம் ஆகியன ஏற்படுவதுபோல், அப்பஞ்ச பூதங்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் மாறுபட்ட குறுக்கீடுகள் செயல்பாடுகள் வரும்போது, நமது மனையில் வாஸ்துக் குறைபாடுகள் இருப்பின் நமது மனை வாஸ்து பலம் இழந்திருந்தால் நாம் தீய பலன்களை சந்திக்க நேரிடுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள குறைபாடுகள் நமது உடல் நலத்திற்கு கேடு விளை விப்பது போல், நமது மனையில் உள்ள வாஸ்துக்குறைகள் நமக்கு தீங்கு விளைவிக்கின்றன. எனவே நாம் வாஸ்து குறைபாடுகளற்ற மனைகளையோ, கட்டிடங்களையோ அமைத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமானதாகும். தற்போதைய கட்டிடத்துறை வியக்கத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. நவீன கால கட்டிடங்கள் மிகவும் அழகும், பிரமாண்டமும், புதுமையாகவும், துல்லியமான அமைப்பாகவும் கட்டப்பட்டு பெரும் சக்திமிக்கவையாக பெருக்கெடுத்து விளங்குகின்றது. அவை வாஸ்து சாஸ்திரத்துக்கு அமைய அமைப்புக்கள் இருப்பது மிகவும் அவசியமானதாகும். எல்லா இனத்தவரும் இதைப் பின் பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. வாஸ்து முறை கட்டிடங்கள் அதில் வசிப்பவர்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் நன்மையைத் தருகின்றன. வாஸ்துவின் முரனாண கட்டிடங்கள் பெரும் கஸ்டங்களை உருவாக்கி நிம்மதியற்றுப் போகச் செய்துவிடும். தூக்கத்தை விற்று கட்டிலை வாங்கிவிடக்கூடாது. கட்டிடங்களின் அளவு அளவு சிறியதாயினும், பெரியதாயினும் அவை வாஸ்து அமைப்புகளுக்கு ஒப்ப அமைத்தால் மாத்திரமே நற்பலன்களைத் தரும்.

vasthu-img உங்கள் வீட்டின் வாஸ்துக் குறைகளைப் பற்றியும் நற்பலனைகளைப் பற்றியும் ஆராய்ந்து தெரிந்து கொள்வீர்களானால் அதை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து அவர்களையும் நன்மையடையச் செய்யுங்கள். மனையின் ஈசான்யத்தில் உள்ள கிணறும் நிலத்தடி நீர்த்தொட்டியும் மிகுந்த நிம்மதியைத்தரும். மனையின் தென்மேற்கு நிருதியில் உள்ள மேடும், உயரங்கள், பெரிய மரங்களும், உயரமான கட்டிடமும் ஆரோக்கியத்தைத் தரும். இந்த இரண்டு நிலையிலேயும், சில கட்டிடங்கள் பாதியில் முழுமை பெறாமலும் நின்று போவதையும் பார்க்கின்றோம். சில கட்டிடங்களில் குடியேறியதும், அக்குடும்பத்தினரும், குடும்பத் தலைவரும், உடல்நலக்குறைவாலும், வறுமையாலும், கடன் தொல்லையால் பாதிக்கப்படுவதையும், சில சமயத்தில் அகால மரணங்களைச் சந்திப்பதையும் பார்க்கின்றோம். வாஸ்து விதிகளுக்கு அமைய கட்டிய கட்டிடங்களைத் தவிர ஏனைய கட்டிடங்கள் நற்பலன்களைத் தருவதே இல்லை என்பது பல ஆராய்ச்சியின் உண்மையாகும். வாஸ்துக் குறைகள் குறைவாக உள்ள இல்லத்தில் வாழும் மனிதன் வாழக்கையில் மிகவும் குறைவான பிரச்சினைகளையே சந்திக்கின்றான்.

நாம் வாஸ்துக் குறைகள் உள்ள வீட்டையே அதிகம் பார்க்கின்றோமே அன்றி முழுமையாக வாஸ்துக் குறையற்ற வீட்டை காணுதல் அரிதாக உள்ளன. பெருமளவில் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்க இயலாவிட்டாலும், தவறான பகுதிகளில் இருக்கின்ற தெருக்குத்தல், மதில்கள், வாயில், பள்ளங்கள், கிணறு, ஆழ்துளைக்கிணறு, நிலத்தடி நீர்த்தொட்டி, மலக்குழி, மேல்நிலைத்தொட்டி, பாரங்கள், தலைவாசல்கள், மாடிப்படிகள், படுக்கை அறை, சமையலறை மற்றும் ஈசான்யம், அக்னி, வாயு ஆகிய மூலைகள் மூடப்படுதல் வெட்டு விழுதல், போன்ற ஆபத்துக்கள் விளைவிக்கும் அமைப்புக்கள் இல்லாமலாவது கட்டிடங்களை அமைத்து கொள்ள வேண்டும்.

vasthu-img வாஸ்து பலம் குறைந்த மனைகள் விற்பனை யாவதும் அரிது. அதில் நிம்மதியாக வாழ்வதும் அரிது அக்குறைகளை சரி செய்யாமல் கட்டிடம் கட்டிமுடிப்பதும் அரிது. அப்படிக் கட்டினாலும் கட்டிடம் கட்டும்போது ஏற்படும் வாஸ்துக் குறைகள் சேர்ந்து நாம் முன்னேற் றத்தை தடுத்து நம்மனநிம்மதியைக் குலைக்கின்றன. எனவே மனையாகிலும், கட்டிடமாகிலும், வாஸ்துக் குறைகள் சரி செய்யப்பட்டாக வேண்டும். எவ்வாறு வாஸ்து பலங்கள் நமக்கு நன்மையும், முன்னேற்றமும், செல்வமும், பெயரும், புகழும், உடல் நலனும், மகிழ்ச்சியும் தரவல்லனவோ அதுபோன்ற வாஸ்துக் குறைகள் நமக்குப் பெரும் தடைகளும், தீமைகளும், துயரங்களும், வறுமையும், களங்கமும், ஏன் அகால மரணமும் கூடத் தரவல்லன. இல்லம் என்பது ஒருவர் மட்டும் வாழுமிடமல்ல. அதுபோன்றே கல்விக்கூடம், தொழிற்சாலை, நிறுவனம், அலுவலகம் என்பன ஒருவர் மட்டும் செயல்படுமிடமல்ல. இல்லத்திலும், இதர இடங்களிலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண்களும், பெண்களும் வாழ்கின்றனர், செயல்படு கின்றனர். ஒவ்வொருவருக்கும் அவர்களது வயதிற்கேற்ப பிரச்சனைகள் உள்ளன. உடல்நலம், கல்வி, அறிவு, பணி, முன்னேற்றம், செல்வமீட்டல், உயர்வு, திருமணம், குடும்ப வாழ்க்கை, பொதுவாழ்வு, நேச உணர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளிலும் அனைவருக்கும் நற்பலன்கள் கிட்ட, அதற்கேற்ப மனையின் அமைப்பும், கட்டிடங்களின் அமைப்பும், வாஸ்து பலம் பொருந்தியதாக இருத்தல் வேண்டும் என்பது அவசியமான தொன்றாகிறது

நமது முன்னோர்கள் அவர்களுடைய நீண்ட கால அனுபவத்தின்படியில் இயற்கை விதிகளுக்கேற்ப, குறைகள் இல்லாமலும் வீடு அமைப்பதற்கான நியதிகளை வகுத்து வைத்துள்ளனர். இந்த முறைகளே வாஸ்து சாஸ்திரமாகும். நமது அமைவிடத்தாலும், சுற்றுப்புறச் சூழலாலும் மனித வாழ்க்கையும், உடல்நலமும் பாதிக்கப்படுவதை இன்று அறிவியல் ஆரச்சி யாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், இது தெரிவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே நமது முன்னோர்கள் சுற்றுப்புற அமைப்புகளும், கட்டட அமைப்புகளும் மனித வாழ்க்கையில் எந்தளவு பாதிப்புக்களையும், நன்மைகளை அளிக்கின்றன, என்பதைப் பற்றி மிகவும் துல்லியமாக ஆராய்ந்துள்ளனர். சுற்றுப்புற அமைப்புகளிலும், கட்டட அமைப்புகளிலும் உள்ள குறைகள் தான் மனித வாழ்க்கை நிம்மதி இல்லாமல் துன்பமாக ஆகிவிடுகின்றன. எனவே நம்முடைய முன்னோர்களின் நீண்ட கால ஆராச்சியையும், அனுபவத்தையும், யுக்திகளையும் நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வீடுகள் கட்டினால் நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கும்.

முற்காலத்தைவிட இன்று வீடு கட்டுவதில் எத்தனையோ முன்னேற்றங்களும், நவீனங் களும் ஏற்பட்டுள்ளன. பழைய காலத்தில் இல்லாத புதிய வகை கட்டட வடிவமைப்புக்கள் இன்று உருவாகிக் கொண்டு இருக்கின்றன. இறைவனின் எல்லா ஆலயங்களும் தொன்றுதொட்டே ஆகம முறைக்கு அமைவாகவே இருந்து வந்தன இப்போது உள்ள நவீன யுகத்தில் அதனை புதிப்பித்தல் என்கின்ற பெயரில் வாஸ்து பிழையாக மாற்றியமைப்பதன் மூலம் சமுதாயம் பல சிக்கல்களிலும் ஆபத்திலும் மாட்டிக் கொள்கின்றன. இறைவன் நமக்கு நன்மைதரக் காத்துக் கொண்டுள்ளார். வாஸ்துப்படி உள்ள ஆலயம், மனை, கட்டிடங்கள் எத்தனை காலமானாலும் நற்பலன்களை தந்து கொண்டே இருக்கும். எனவே வாஸ்து விதிகளை நல்லமுறையில் பயன்படுத்தி நன்மையடைவது நம்கையில்தான் உள்ளது.